திருமணம், சடங்கு, பிறந்த நாள் போன்ற முக்கிய விசேஷங்களுக்கு மொத்தமாக பால் பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக ஆவின் நிறுவனம் புதிய சேவை மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆவின் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.,

திருமணம் போன்ற முக்கிய விசேஷங்களுக்கு சமையல் கலைஞர்கள் மொத்தமாக பால் பொருட்கள் வாங்குவது வழக்கம். இதற்காக தனிச்சேவை மையம் ஒன்று தொடங்குவது தொடர்பாக கடந்த சில நாட்களாக ஆலோசித்து வந்த ஆவின் நிறுவனம் தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

சென்னை நந்தனம் ஆவின் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய சேவை மையத்திற்கு, சமையல் கலைஞர்கள் 9445530503 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான மொத்த பால் பொருட்களை ஆர்டர் செய்யலாம். 100 லிட்டருக்கும் அதிகமான ஆர்டர்களை ஆவின் நிறுவன ஊழியர்களே டோர் டெலிவரி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மொத்தமாக ஆர்டர் செய்யும் சமையல் கலைஞர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.1 ஊக்கத்தொகையும், சில்லறை விற்பனை விலையை விட அவர்களுக்கு சில குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடியும் செய்யப்படும் என்றும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.