பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் தீமை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த சென்னையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு கலைப்பயணம் ஒன்றை சென்னை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை, அரும்புகள் அறக்கட்டளை, தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழிப்புணர்வு பயண வாகனம் ராயபுரம், புது வண்ணாரப்பேட்டை, கண்ணதாசன் நகர், பெரம்பூர், அயனாவரம், வில்லிவாக்கம், பாடி, கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று பயணம் செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தது.

மேலும் இன்று அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், தியாகராய நகர், கோடம்பாக்கம் வடபழனி, போரூர் ஆகிய பகுதிகளில் இந்த அமைப்பினர் விழிப்புணர்வுப் பிரசாரம் செய்யவுள்ளனர்.

பிளாஸ்டி விழிப்புணர்வு தொடக்க விழாவில், சுற்றுச்சூழல் துறை கூடுதல் இயக்குநர் எம்.ஜெயந்தி, அரும்புகள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ராஜ மதிவாணன், இயக்குநர் வி.லதா மதிவாணன், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தலைவர் ஹரிஷ் எல் மேத்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

English Summary : Plastic evil awareness trip in Chennai