சிம்பு அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ படத்தில் அறிமுகமான நடிகை சார்மி, அதன் பின்னர் கண்மணி என்பவர் இயக்கிய’ஆஹா எத்தனை அழகு, பிரபு சாலமன் இயக்கிய ‘லாடம்’ ஆகிய தமிழ்ப் படங்களிலும், ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்தார். தெலுங்கு திரையுலகில் பல வெற்றிப்படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக பல ஆண்டுகளாக இருந்து வரும் நடிகை சார்மி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

சார்மி தற்போது தெலுங்கில் ‘ஜோதிலட்சுமி’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிமுக விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றபோது, அந்த மேடையிலேயே படக்குழுவினர்களுடன் தனது பிறந்த நாளையும் கொண்டாடினார்.

ஜோதிலட்சுமி படக்குழுவினர்களும், பிற திரையுலகினர்களும் சார்மிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினர். இந்நிலையில் ‘ஜோதி லட்சுமி’ படத்தின் தயாரிப்பாளரான கல்யாண், சார்மிக்கு வைர மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார். சிங்க வடிவிலான அந்த வைர மோதிரத்தை தன் கையில் போட்டுக் கொண்ட புகைப்படம் ஒன்றை நடிகை சார்மி இன்று தனது டுவிட்டரில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

English Summary: Actress Charmi Kaur celebrated her Birthday. Her new films Producer Kalyan gifted the Diamond ring.