ஏர் ஏசியா விமானம் கடந்த மாதம் இந்தோனேஷியா கடல் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது. அதில் பயணித்த 162 பேர் உயிரிழந்தனர். ஜாவா கடல் பகுதியில் விமானத்தின் வால்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் விமானத்தின் கருப்பு பெட்டியும் கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.