அதுல் காரே, இந்தியாவை சேர்ந்த மூத்த தூதரக அதிகாரியான இவரை ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் பான் கீ-மூன், ஐக்கிய நாடுகள் சபையின் உலக அளவில் அமைதி காக்கும் இயக்கங்களுக்கு உதவிகரமாக செயல்படுவது தொடர்பான துறையின் தலைமை பொறுப்புக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இத்துறை பாதுகாப்பு, நிதி, நிர்வாகம், மனித வளம், சரக்குகள் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகள் தொடர்பான பணிகளில் உதவிகரமாக செயல்படும். இத்துறைக்கு கடந்த 2012ம் ஆண்டு தலைமை பொறுப்பேற்ற வங்காளதேசத்தின் அமீரா ஹக்-யின் பதவி காலம் நிறைவுபெறுகிறது.

இது குறித்து காரே கூறும்பொழுது, ஐ.நா. பொது செயலாளர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிறைவு செய்வேன் மற்றும் உலகை அமைதியாகவும் மற்றும் அனைவருக்கும் ஏற்ற சிறந்த இடமாக மாற்றுவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார்.