இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல் இருக்கிறது. அந்த வகையில் ஏர்டெல் சேவையை பயன்படுத்துவோர் டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்வது அவசியமான ஒன்றாகும். மொபைல் நம்பரில் டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்யவில்லை எனில் உங்களுக்கு ஏராளமான ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் வரும்.

இந்தியாவில் புதிதாக சிம் கார்டு வாங்குவோர் முதலில் செய்ய வேண்டியது டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்வது தான். இவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் விளம்பர நிறுவனங்கள் தொடர் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களின் மூலம் தொல்லை கொடுக்க ஆரம்பித்திடுவர். இவற்றை எதிர்கொள்ளாமல் இருக்க டி.என்.டி. சேவையை தவிர வேறு வழியில்லை.

இவற்றில் இருந்து தப்பிக்க டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்வது அவசியமாகும். ஏர்டெல் மொபைலில் டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்வது மிகவும் எளிய காரியம் தான். மற்ற டெலிகாம் நிறுவனங்களில் செய்வதை போன்றே ஏர்டெல் சேவையிலும் டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்திடலாம்.

ஆக்டிவேட் செய்வது எப்படி?

ஏர்டெல் சேவையில் டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்வதற்கான வழிமுறைகள்.

1 – ஏர்டெல் வலைதளத்தில் டி.என்.டி. பக்கத்தை திறக்க வேண்டும்.

2 – இனி ஏர்டெல் மொபைல் சேவைகளின் மேல் காணப்படும் Click Here பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

3 – அடுத்து உங்களது ஏர்டெல் நம்பரை பதிவிட வேண்டும்.

4 – இனி உங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் வரும்.

5 – உங்களது மொபைல் நம்பருக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் பதிவிட வேண்டும்.

6 – அடுத்த திரையில் Stop All பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

7 – இனி Submit பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

எஸ்.எம்.எஸ். மற்றும் அழைப்பின் மூலம் ஏர்டெல் நம்பரில் டி.என்.டி. ஆக்டிவேட் செய்வது எப்படி?

ஏர்டெல் நம்பரில் டி.என்.டி. சேவையை ஆக்டிவேட் செய்ய எஸ்.எம்.எஸ். அல்லது வாய்ஸ் கால் மேற்கொள்ளலாம். இதற்கான வழிமுறைகளை கீழே காணலாம்.

1 – ஏர்டெல் மொபைல் நம்பரில் இருந்து 1909 என்ற எண்ணிற்கு அழைப்பை மேற்கொள்ள வேண்டும். ஐ.வி.ஆர். குரலை செயல்படுத்தும் பட்சத்தில் உங்களுக்கு டி.என்.டி. ஆக்டிவேட் ஆகிவிடும்.

2 – உங்களது ஏர்டெல் நம்பரில் இருந்து START 0 என டைப் செய்து 1909 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

உங்களது மொபைல் நம்பரில் டி.என்.டி. சேவை ஆக்டிவேட் ஆக ஒரு வாரம் ஆகும். டி.என்.டி. ஆக்டிவேட் ஆகும் பட்சத்தில் டெலிகாம் ஆப்பரேட்டர்களிடம் இருந்து உங்களுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் குறைய ஆரம்பிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *