அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற முதல் பருவ நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகளை aucoe.annauniv.edu, coe1.annauniv.edu, coe2.annauniv.edu ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

அல்லது அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ தளத்தில் உள்நுழையவும். முகப்புப் பக்கத்தில் இருக்கும் Ist Sem UG / PG – Nov./Dec.2018 என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

தற்போது திறக்கப்பட்ட புதிய பக்கத்தில் உங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிடவும். அங்கே தங்களுடைய தேர்வு முடிவுகள் வரும். பிற்காலத் தேவைக்கு ஏற்ப தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *