சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அஜீத் 56’ படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

லட்சுமி மேனனுடன் முதல்கட்ட படப்பிடிப்பிலும், கபீர்சிங் உடன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொண்ட அஜீத், மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் மற்றும் சூரியுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இந்நிலையில் இந்த படப்பிடிப்பு துபாய், அபுதாபி ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், துபாய் சென்று படப்பிடிப்பிற்கு தேவையான லோகேஷன்களை முடிவு செய்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டொரு நாட்களில் அஜீத், ஸ்ருதிஹாசன், சூரி உள்பட டெக்னீஷியன்கள் அனைவரும் துபாய் பறக்கவுள்ளனர்.

துபாய் மற்றும் அபுதாபியில் அனிருத் இசையமைத்த இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், அஜீத்-சூரியின் காமெடி காட்சிகளும் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. துபாய் படப்பிடிப்பு முடிவடைந்ததும் நான்காவது கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

English Summary : “Ajith 56 “shooting in now under going in Abu Dhabi, Dubai.