surthihasan
கோலிவுட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களை அடுத்து அஜீத், விஜய், சூர்யா ஆகியோர்கள்தான் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் மூவரின் படங்களுக்கும் நல்ல ஓபனிங் இருக்கும் என்பது விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த மூன்று நடிகர்களில் ஒரு நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதையே பெருமையாக நினைக்கும் கோலிவுட் பிரபல நடிகைகளின் மத்தியில் ஒரு நடிகைக்கு ஒரே நேரத்தில் மூவருடனும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம் அவர்தான் முன்னணி நடிகையும் உலக நாயகன் கமலின் கலையுலக வாரிசுமான ஸ்ருதிஹாசன்.

ஏற்கனவே விஜய்யுடன் ‘புலி’, அஜீத்துடன் ‘தல 56’ ஆகிய படங்களில் விஜய், அஜீத்துக்கு ஜோடியாக நடித்து கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன், தற்போது சூர்யா நடிப்பில் ஹரி இயக்கவுள்ள ‘சிங்கம் 3’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒரே நேரத்தில் மூன்று முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் ஒரே தமிழ் நடிகை ஸ்ருதிஹாசன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் இளம் இசையமைப்பாளர்களில் முன்னணி இடத்தில் இருக்கும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

English Summary: ajith, vijay, surya in-acting shruti hassan