thiruttkalyanam
கே.பாக்யராஜ், சசி ஆகிய முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்த ஷக்திவேலன் என்பவர் இயக்கியுள்ள திரைப்படம் ‘திருட்டுக் கல்யாணம். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

படத்தின் தலைப்புக்கு ஏற்றாற்போல இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவை வித்தியாசமாக நடத்த முடிவு செய்த இயக்குனர் ஷக்திவேலன், தமிழகத்தில் திருட்டுக்கல்யாணம் செய்து கொண்ட சுமார் 1000 ஜோடிகளை தேடிப்பிடித்து அவர்களின் அனுபவங்களை அறிந்து கொண்டு அவர்களில் ஒரு ஜோடியை தேர்வு செய்தார். இந்த ஜோடி மூலம் அவர் தனது ‘திருட்டுக் கல்யாணம்’ திரைப்படத்தின் பாடல்களை வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் திரைக்கதையும், இந்த ஜோடியின் உண்மைக் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்ததே இந்த ஜோடியை தேர்வு செய்ததற்கு காரணம் என  இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

ஸ்ரீசெந்தூர் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக சி.வெங்கிடுபதி, எஸ்.பாலசுப்ரமணியம், கே.ஏ.சசிபிரகாஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் ஆடுகளம் நரேன், தம்பி ராமையா, தேவதர்ஷினி உள்பட பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு வைத்தி என்பவர் இசையமைத்துள்ளார். இந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் கே.பாக்யராஜ், சசி, கே.ரங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

English Summary: different thinking in thiruttukalyanam audio launching