இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 8000க்கும் அதிகமான மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் கற்பிக்கும் பணியை விருப்புவர்களுக்கு இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் வரும் 15ம் தேதி வழங்கப்படுகிறது. மேலும், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 5 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், கடந்தாண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த தேர்வு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நாள்: 15-03-2019

கடைசி நாள்: 05-04-2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணபிக்கும் முறை: www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தாள் -1, தாள்- 2 என்று தனித்தனியே விண்ணபிக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

தேர்வுக்கட்டணம்:

எஸ்சி/எஸ்டி மற்றும் PWD பிரிவினருக்கு கட்டணம் :ரூ. 250
மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:

ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும். இதில் முதல் மற்றும் 2-ம் தாள் தேர்வுகளுக்கு தனித்தனியாக தேர்வுக்கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: BET, DTED முடித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் தகவலுக்கு, http//trb.tn.nic.in/TET_2019/tett2019.pdf – என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *