அனுஷ்கா, ருத்ரமாதேவி படத்தின் சிலகாட்சிகளில் ஆண்வேடத்தில் நடித்துள்ளார். இப்படம், ராணி ருத்ரமாதேவியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இயக்கி வருகிறார் குணசேகர். படத்தின் இசை இளையராஜா.

ருத்ரமாதேவி, சிறந்த போர்வீராங்கனையாக திகழ்ந்ததால் குதிரை சவாரி, வாள் சண்டை, களறி சண்டை போன்றவற்றை கற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும், சண்டை காட்சிகளில் டூப் எதுவும் போடாமல் அனுஷ்கா நடித்துள்ளார்.