ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள ஐ படம், ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஐ தமிழ் வெர்சன், வரும் 9ம் தேதியும், 14ம் தேதி, தெலுங்கு வெர்சனும் வெளியாவதாக இருந்தது. இந்நிலையில், ஐ படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்சன், ஜனவரி 14ம் தேதியே ரிலீஸ் ஆக உள்ளது. வெளிநாடுகளிலும் படத்தை ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.