ஆசியாவின் சக்தி வாய்ந்த 50 பெண் நிர்வாகிகளில், ஆறு இந்தியர்கள் என போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

அருந்ததி பட்டாச்சார்யா – ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர். 18 லட்சம் கோடி ரூபாய் சொத்துள்ள வங்கியையும், 22.50 கோடி வாடிக்கையாளர்களையும் நிர்வகித்து வருகிறார்.

சந்தா கோச்சார் – ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் தலைமை செயல் அதிகாரி. 6 லட்சம் கோடி ரூபாய் சொத்துள்ள வங்கியை, கடந்த ஆறு ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார்.

ஷிகா ஷர்மா – ஆக்சிஸ் பேங்க் தலைவர். 4 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகிக்கிறார்.

அகிலா ஸ்ரீனிவாசன் – ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் / ஸ்ரீராம் கேபிட்டல் நிர்வாக இயக்குனர். 79,800 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை கொண்ட ஸ்ரீராம் குழுமத்தில், 29 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுபவர்.

கிரண் மசூம்தார் ஷா – பயோகான் நிர்வாக இயக்குனர். 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக்கிறார்.

உஷா சங்வன் – லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர். இந்தியாவின், மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனத்தின் முதல் பெண் நிர்வாக இயக்குனர் என்ற சிறப்பை பெற்றவர்.