மக்களவையில் நேற்று 2015-16ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார். இதில் சரக்கு போக்குவரத்து கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள், சமையல் எண்ணெய், சிமென்ட், இரும்பு, நிலக்கரி, சமையல் எரிவாயு, மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சரக்கு போக்குவரத்து கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்படுவதால் கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், சிமென்ட், யூரியா, சமையல் எரிவாயு மற்றும் இரும்பு ஆகிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என்று வர்த்தக அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

English Summary : In Railway budget submitted by Railway Minister Suresh Prabhu, 10 percent hike in transport fee has led to risk of increasing the price of essential goods.