asin-26102015எம்.குமரன் S/o மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் போக்கிரி, ஆழ்வார், கஜினி, தசாவதாரம் போன்ற படங்களில் நடித்த பிரபல நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் சர்மாவை திருமணம் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது ராகுல்சர்மா-அசின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும் நவம்பர் 26ஆம் தேதி டெல்லியில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கு இருவீட்டார்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையாளர்கள் உள்பட வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.

திருமணத்திற்கு மறுநாள் அதாவது நவம்பர் 27ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள West End Greens என்ற பண்ணை வீட்டில் வரவேற்பு நடைபெறும் என்றும் இந்த வரவேற்பிலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதே பண்ணை வீட்டில்தான் பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் மற்றும் வரவேற்பு முடிந்த பின்னர் அசின், தனது மும்பை மற்றும் சென்னை நண்பர்கள் மற்றும் சக நடிகர், நடிகைகளுக்காக மும்பையில் ஒரு ரிஷப்ஷன் ஏற்பாடு செய்திருப்பதாகவும், இதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வந்துள்ளது. திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால், இருவீட்டார்களும் திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.English summary-Actress asin marriage date announced