passport-25102015-1அரசு ஊழியர்கள், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரிய ஆசிரியைகள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், ஆகியோர் பாஸ்போர்ட் பெறுவதிலும் வெளிநாடு செல்வதிலும் பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இதன் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்புள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளி ஆசிரியர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிக் கல்வி இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று விடுப்பு அனுமதிக்கப்பட்டால் மட்டுமே வெளிநாடு செல்ல முடியும். இந்த அனுமதியை பெற தங்கள் விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால் பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும் தடையில்லா சான்று பெறுவதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் விண்ணப்பப் படிவ நகலை, பணி நியமன அலுவலருக்கு அனுப்பிவிட்டு பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித்துறையினர் அனுமதி பெற்று பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று முன்பு இருந்த நிலை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறபபட்டுள்ளது.
English summary-No restrictions for getting passport for Government school teachers