Ananth-Vaidyanathan-2510201விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நேயர்களிடையே பெரும்புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு குரலை மேம்படுத்தும் பயிற்சியாளராக கடந்த சில வருடங்களாக இருந்து வருபவர் அனந்த் வைத்தியநாதன். இவர் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பிற மாநிலங்களின் தொலைக்காட்சி நடக்கும் இசை நிகழ்ச்சிகளிலும் குரல் நிபுணராக இருந்து போட்டியாளர்களின் குரல் வளத்தை மேம்படுத்தி வருகிறார். இவர் சங்கீத் ரிசர்ச் அகாடமியிலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அனந்த் வைத்தியநாதன், தற்போது தமிழகத்திலேயே முதன் முதலாக இசை நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்களின் குரலை மேம்படுத்துவதற்காக வாய்ஸ் அகாடமி என்ற பள்ளியை கோவையில் திறந்துள்ளார். இந்த பள்ளிக்கான சேர்க்கை ஆடிசன் மூலமாக தற்போது தேர்வு செய்யப்பட்டு வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி போன்று இன்னும் பல இசை நிகழ்ச்சியில் கலந்த கொள்ள விரும்பும் போட்டியாளர்கள் இந்த சங்கீத் ரிசர்ச் அகாடமியில் சேர்ந்து தங்கள் குரலை மேம்படுத்துவதோடு, சங்கீத ஞானத்தையும் கற்றுக்கொள்ளலாம். இதில் சேரவிரும்புபவர்கள் 7200077111, 080 88268242, 9842249076, மற்றும் 9943099602 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் drrao@drrao.in என்ற ஈமெயில் முகவரியில் தொடர்பு கொண்டாலும், இதில் சேர்வதற்கான விபரங்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை வருங்கால பாடகர்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
English summary-New effort from vijay tv Ananth Vaidyanathan