Jayalalitha-26102015
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன் சட்டசபையில் அறிவித்தபடி ஆர்.கே. நகரில் புதிய அரசு தொழி|ற்பயிற்சி நிலையம் தொடங்கப்படவுள்ளது. இந்த புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக செயல்படும் என்றும், இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேருவதற்கு மாணவ-மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

அந்த செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்த புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 2 ஆண்டு படிப்புகளான பிட்டர், எலக்ட்ரீசியன் மற்றும் கம்மியர் மோட்டார் வாகனம் (எம்.எம்.வி.) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்படிப்பில் சேருவதற்கு ஆண்களுக்கு 14 வயது முதல் 40 வயது வரையும், மகளிருக்கு உச்ச வரம்பு இல்லை.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பயிற்சி கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இதுதவிர மாதந்தோறும் 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் மாணவ-மாணவிகளுக்கு அரசால் வழங்கப்படும் விலையில்லா லேப்டாப், விலையில்லா சைக்கிள், விலையில்லா புத்தகம், விலையில்லா வரைபடக்கருவி, விலையில்லா சீருடை, விலையில்லா காலணி ஆகியவை வழங்கப்படும்.

பயிற்சிகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் விண்ணப்ப படிவங்களை, புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் வீதியில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அல்லது, வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் சென்று 50 ரூபாய் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை வரும் நவம்பர் 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
English summary-Last date announced to apply for New Arts & Sciences College course in Dr. Radhakrishnan Nagar in Chennai