நாளை மறுநாள் அதாவது ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்கர் வாகன ஓட்டிகளும், பின்னாள் உட்கார்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக அரசு மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து நகரில் ஹெல்மெட் வியாபாரம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஹெல்மெட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னையில் சைக்கிள் ஊர்வலம் ஒன்று நேற்று நடந்தது.

வடசென்னை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிவது குறித்து சென்னை பெரம்பூரில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை வட்டார போக்குவரத்து அதிகாரி யுவராஜ் தொடங்கி வைத்தார்.

பேரணியில் ஈடுபட்டவர்கள் பெரம்பூரில் இருந்து திரு.வி.க. நகர், வியாசர்பாடி, மூலக்கடை ஆகிய இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். அப்போது அந்த பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நடராஜ், டான்பாஸ்கோ மற்றும் வட்டார போக்குவரத்து பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

English Summary : A Bicycle procession was conducted in Chennai for helmet awareness.