Vedhalam-Movie-Copyசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த ‘வேதாளம்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக இணையதளங்களில் பெரும் ஏற்படுத்திய விரைவில் இந்த படத்தின் பாடல் வெளியீடு வரும் 16ஆம் தேதி ‘வேதாளம்’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பிறந்த நாளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்னர் இந்த படத்தின் ஆடியோ டீசர் இன்று இரவு வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை இந்த படத்தின் படத்தொகுப்பாளர் ரூபன் அவர்கள் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

‘தெறிக்க விடலாமா’ டீசருக்கு பின்னர் தரலோக்கல் ஆடியோ டீசரை கேட்டு மகிழுங்கள்’ என படத்தொகுப்பாளர் ரூபன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் வெளிவந்தது முதல் அஜீத் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் ‘வேதாளம்’ படத்தில் இசையமைப்பாளர் அனிருத் பாலிவுட் ராப் பாடகர் ஒருவரை அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற பாடகர் DJ WALEY BABU அவர்கள் ‘வேதாளம் படத்திற்காக படுஸ்பீடான ராப் பாடல் ஒன்றை பாடியிருப்பதாகவும், இந்த பாடல் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், சூரி, தம்பிராமையா, ராகுல்தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

English Summary: Bollywood Rap Singer Debut in Vedhalam Movie.