kaan-firt-look-posterஇளையதளபதி விஜய் முயற்சியால் சமீபத்தில் சிம்பு நடித்த ‘வாலு’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் வெகுவிரைவில் ரிலீஸாக உள்ளது. மேலும் சிம்பு தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘கான்’ என்ற படத்திலும் கெளதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்திலும் நடித்து கொண்டிருந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக செல்வராகவனின் ‘கான்’ திரைப்படம் இப்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “‘கான்’ படம் குறித்து நிறைய வதந்திகள் இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில் நான் அதற்கு தகுந்த பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன். கான் படத்தின் திரைக்கதை என் மனதை மிகவும் கவர்ந்த நெருக்கமான கதையம்சம் கொண்ட ஒரு படம். இருப்பினும் ஒருசில காரணங்களால் இந்த படத்தை நானும் படக்குழுவினர்களும் ஒருமனதாக இணைந்து படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.

ஆனாலும் இந்தப் படத்தை அடுத்த வருடம் மீண்டும் துவக்க முடிவு செய்திருக்கின்றோம். சிம்பு மற்றும் ‘கான்’ படக்குழுவினர்களுடன் இணைந்து பணியாற்றிய காலங்களை கண்டிப்பாக நான் மிஸ் செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே சிம்பு நடித்து கொண்டிருப்பதாக கூறப்பட்ட கெட்டவன், வாலிபன், வேட்டை மன்னன், வடசென்னை ஆகிய படங்கள் டிராப் ஆன நிலையில் தற்போது மேலும் ஒரு படம் டிராப் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘கான்’ படம் டிராப் ஆனதை அடுத்து செல்வராகவன் தற்போது தனுஷ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் தனுஷே நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

English Summary: Simbhu- Selvaragavan Combined Khan Movie Drop.