சென்னை மாநகராட்சியின் 2015-16ஆம் ஆண்டின் பட்ஜெட் அறிக்கையை நேற்று மாநகராட்சி அரங்கில் மேயர் சைதை துரைசாமி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 2015-16 ஆம் நிதியாண்டில் மாநகராட்சியின் மொத்த வரவு ரூ.2,392.56 கோடியாகவும், மொத்த செலவு ரூ.2,341.05 கோடி இருக்கும் என்றும், உபரியாக ரூ.51.51 கோடி இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் சொத்து வரி மூலம் மாநகராட்சிக்கு ரூ.600 கோடி வருவாயும் தொழில் வரி மூலம் ரூ.250 கோடி வருவாயும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.,

மேலும் இந்த நிதியாண்டில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு துறைவாரியான ஒதுக்கீடு எவ்வளவு என்பதையும் மேயர் துரைசாமி இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். அதன் விபரங்கள் பின்வருமாறு:

கட்டிடங்கள் துறை : ரூ.122 கோடி
மழைநீர் வடிகால் துறை : ரூ.350 கோடி
கல்வித்துறை : ரூ.7 கோடி
சுகாதாரத்துறை : ரூ.5.50 கோடி
மாவட்ட குடும்ப நலத்துறை : ரூ.2 கோடி
பாலங்கள் துறை : ரூ.42 கோடி
மின் துறை : ரூ.150 கோடி
இயந்திர பொறியியல் துறை : ரூ.11 கோடி
திடக்கழிவு மேலாண்மை துறை: ரூ.15 கோடி
சிறப்பு திட்டங்கள் : ரூ.90 கோடி
பூங்கா உருவாக்கம், விளையாட்டித்திடம் மேம்பாடு: ரூ.90 கோடி

English Summary : Budget 2015-16 in Chennai