சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த குசேலன் உள்பட பல திரைப்படங்களில் காமெடி மற்றும் கவர்ச்சி வேடங்களில் நடித்த நடிகை சோனா நேற்று முதல் டுவிட்டரில் இணைந்துள்ளார். கடைசியாக நானும் டுவிட்டருக்கு வந்துவிட்டேன் என்று முதல் டுவீட்டை பதிவு செய்துள்ள அவர் இனி தன்னைப்பற்றியும், தன்னுடைய படங்கள் குறித்தும் அவ்வப்போது டுவிட்டரில் தனது ரசிகர்களுக்கு தகவல் தரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு மிகவும் பிடித்த ஒரு புகைப்படத்தையும் டுவிட்டரில் பதிவு செய்துள்ள சோனா, ‘இதுவரை இரண்டு போட்டோஷூட்களில் மட்டுமே தான் கலந்து கொண்டிருப்பதாகவும், அதில் இந்த புகைப்படம் மிகவும் ஸ்பெஷல் ஆனது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா” பட்டம் பெற்ற சோனா, நடிகை மட்டுமின்றி ஜெய் நாயகனாக நடித்த ‘கனிமொழி என்ற படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சோனா சென்னையில் ‘யூனிக்’ என்ற ஃபேஷன் ஸ்டோரையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த ஃபேஷன் ஸ்டோரை பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Actress Sona joined Twitter