madras43சென்னையில் ஏற்கனவே சென்ட்ரல், எழும்பூர் என இரண்டு ரயில் முனையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் மூன்றாவது ரயில் முனையமாக தாம்பரம் தயாராகி வரும் நிலையில் இந்த பணிகள் 80% முடிந்துவிட்டதாகவும், விரைவில் இந்த ரயில் முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாம்பரம் ரயில் முனையம் மொத்தம் 8 நடைமேடைகள், 3 பணிமனை வசதியுடன் அமைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த முனையம் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது

கடந்த 2013ஆம் ஆண்டு தாம்பரத்தில் புதிய ரயில் முனையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. சென்னையில் இதுவரையில் எந்த ரயில் நிலையத்திலும் இல்லாத வகையில் பெரிய அளவில் நவீன உணவகம் அமைக்கப்படுகிறது. தாம்பரம் கிழக்கு பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 5 விரைவு ரயில்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. பிறகு, தேவையை கருத்தில் கொண்டு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘தாம்பரத்தில் 3-வது ரயில் முனையம் ரூ.33 கோடியே 28 லட்சத்து 8 ஆயிரம் செலவில் நடந்து வருகிறது. இந்த முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 8 நடைமேடைகள் இடம் பெறுகின்றன. ரயில்களை தூய்மைப்படுத்தவும், பராமரிக்கவும் 3 பணிமனைகள் அமைக்கப்படவுள்ளன. இதில், தற்போது 2 பணிமனைக்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தாம்பரம் ரயில் முனையம் திறக்கும்போது, பயணிகளுக்கு கூடுதல் ரயில்களை இயக்க முடியும். எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் சில ரயில்கள் மட்டும் தாம்பரத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தாம்பரத்தில் இருந்தே பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க முடியும். இதனால், பயணிகள் கூடுதல் ரயில்சேவை பெறுவதுடன், வீண் அலைச்சலை தவிர்க்க முடியும்’ என்று கூறினார்.

English Summary: Central and Egmore railway terminal at the end of stage 3.