மத்திய திரைப்பட தணிக்கை குழு தலவராக இருந்த லீலா சாம்சன் தனது பதவியை ராஜினாமா செய்தததை தொடர்ந்து புதிய தலைவராக பாஹ்லாஜ் நிஹலானி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மற்ற தணிக்கை குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததால் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரமேஷ்ப தாங்கே, ஜார்ஜ் பெக்கர், ஜீவித ஆகியோர் வரிய உறுப்பினர்களாகவும், சையது அப்துல்பாரி, மிஹிர் பூட்டா, சந்திர பிரகாஷ், வாணி திரிபாதி, எஸ்.வி.சேகர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.