சென்னை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 15 -ஆம் தேதி இராயப்பேட்டை புது கல்லூரியில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 300 – க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்களால் 40,000 -க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. மேலும் அயல்நாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறவனத்தின் வாயிலாக பதிவுகள் செய்யப்பட உள்ளது. எனவே வேலை நாடுநர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்: 15.10.2022

இடம்: இராயப்பேட்டையில் அமைந்துள்ள புது கல்லூரி

கல்வித் தகுதி: 8ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐடிஐ, டிப்ளமோ, நர்ஸிங், பார்மஸி, பொறியியல் பட்டம் பெற்றவர்கள், சிறப்பு நேர்வாக பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்: பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவரக் குறிப்பு (Bio-Data).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *