water_Chennai_020515சென்னை நகரில் பராமரிப்பு பணிகளை குடிநீர் வாரியம் செய்யவுள்ளதால் வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

சென்னை கோயம்பேடு காளி அம்மன் கோவில் தெருவில் 900 மி.மீ. விட்டம் உள்ள குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாயை, மாற்று பாதையில் இணைக்கும் பணி வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்க உள்ளது. இதனால் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் எம்.எம்.டி.ஏ. காலனி, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, நந்தனம், ஆழ்வார்பேட்டை, ஆயிரம் விளக்கு, தியாகராயநகர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, மேற்கு மாம்பலம், அசோக்நகர், கே.கே.நகர், வடபழனி, சாலிகிராமம், ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர்.நகர், விருகம்பாக்கம், நெசப்பாக்கம் மற்றும் ஆழ்வார் திருநகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகத்தில் தடை ஏற்படலாம்.

எனவே இந்த பகுதிகளில் குடிநீர் தடை ஏற்பட்டால், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக (044) 26212101, 24995642, 28153803 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

English Summary: Chennai will affect drinking water supplies in April 22, 23 dates. Water Board Information.