காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- காஞ்சீபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி செயல்பாடுகளான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைபெற உள்ளது.

அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) குன்றத்தூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும், 25-ந் தேதி ஈசா பல்லாவரத்தில் உள்ள பரங்கிமலை(நகரம்) நகராட்சி தொடக்கப்பள்ளி, 26-ந் தேதி மேடவாக்கத்தில் உள்ள பரங்கிமலை (ஊரகம்) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 29-ந் தேதி செங்கல்பட்டில் உள்ள காட்டாங்கொளத்தூர் செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப்பள்ளி, 30-ந் தேதி திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நவம்பர் 1-ந் தேதி திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 2-ந் தேதி மதுராந்தகம் சவுபாக்கியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 9-ந் தேதி எலத்தூர் இருப்பு பவூஞ்சூரில் உள்ள எலத்தூர் வட்டார வளமையம், 12-ந்தேதி பொலம்பாக்கத்தில் உள்ள சித்தாமூர் அரசு மேல்நிலைப்பள்ளி, 13-ந் தேதி அச்சரப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 10 இடங்களில் இந்த மருத்துவ கணிப்பு முகாம்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

அந்தந்த பகுதியில் இதுவரையில் தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர் அல்லாத 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளும் இந்த முகாமில் 4 புகைப்படங்களுடன் அசல் குடும்ப அட்டை மற்றும் 2 நகல்கள் மற்றும் ஆதார் அட்டை நகல்களுடன் கலந்துகொண்டு, மருத்துவ குழுவினரின் பரிசோதனைகளுக்கு பின் அன்றைய தினமே மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வாய்ப்பினை மாற்றுத்திறன் குழந்தைகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *