அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது. நவம்பர் 3-ம் மற்றும் 4-ம் தேதியில் பயணம் செய்ய விரும்புவோர் இன்றும் நாளையும் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பதி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தினமும் சுமார் 1000 பேருந்துகள் இயக் கப்படுகின்றன. இதுதவிர திருநெல் வேலி, கோயம்புத்தூர், சேலம், கும்பகோணம் போன்ற போக்கு வரத்து கழகங்களைச் சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட விரைவு பேருந்துகளும் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. வழக்கமான நாட்களைக் காட்டிலும் பண்டிகை நாட்களில் விரைவு பேருந்துகளும் சொகுசு பேருந்துகளும் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படும். இதுதவிர, சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்ட ஏசி, படுக்கை வசதி ஏசி பேருந்து, கழிப்பறை வசதியுள்ள பேருந்துகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ம் தேதி (செவ்வாய்கிழமை) வருகிறது. இந்த பண்டிகையையொட்டி அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது: அரசு விரைவு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். நவம்பர் 2-ம் தேதியில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்த சிலர் நேற்று டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், நவம்பர் 3-ம் மற்றும் 4-ம் தேதியில் பயணம் செய்ய விரும்புவோர் இன்றும் நாளையும் முன்பதிவு செய்யலாம்.

300 கிமீ தூரத்துக்கு மேல் செல்லும் அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 125 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. இதில், சென்னையில் கோயம்பேடு, தியாகராயநகர், திருவான்மியூர், தாம்பரம் உட்பட 19 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. இதுதவிர, www.tnstc.in என்ற இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

1,450 பேருந்துகள் இயக்கம்: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இந்த ஆண்டில் மொத்தம் 2000 புதிய பேருந்துகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஏசி, படுக்கை வசதியுள்ள 40 பேருந்துகள் உட்பட மொத்தம் 550 பேருந்துகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் விரைவு போக்குவரத்துக் கழகத் துக்கு 60 ஏசி, படுக்கை வசதி யுள்ள பேருந்துகள் அளிக்கப்படு கின்றன. இதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1,450 புதிய பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *