மத்திய அரசின் தேசிய சிறுதொழில் கழகம் சார்பில், வரும் டிசம்பர் 16ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், பட்டதாரிகள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி: ஐடிஐ, டிப்ளமோ, பிஇ, பி.டெக்., இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் பங்கேற்கலாம்.

தேவையான ஆவணங்கள்: சுயவிவரக் குறிப்பு (பயோ டேட்டா), முகவரி ஆவணம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை கொண்டுவர வேண்டும்.

மேலும், முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் https://tinyurl.com/nsic-register என்ற ஆன்லைன் லிங்க்கில் முன்பதிவு செய்ய வேண்டும்.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் முகவரி:

எண்: பி-24, என்எஸ்ஐசி-டெக்னிக்கல் சர்வீஸ் சென்டர்,
ஈக்காட்டுதாங்கல்,
சென்னை-600 032.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *