செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை உபரி நீர் திறப்பு 100 கனஅடியில் இருந்து 1,000 கனஅடியாக உயர்த்தி திறக்கப்பட்ட நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 22.25 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.

எனவே, செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவை மதியம் 12 மணிக்கு விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் உபரிநீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 2046 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. எனவே, ஏரியிலிருந்து 2,000 கன அடி நீர் திறப்பால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் நீர்வரத்தை பொறுத்து நீர் திறப்பு கூடுதலாக திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *