சென்னை நுங்கம்பாக்கத்தில் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் “ப்ரிட்ஜ்’ அகாதெமி’, நுண்கலைப் படிப்புகள் தொடங்குவதற்கான அனுமதியை கேட்டு தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்து இருந்தது. இந்த விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்ற்க்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதியை தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் அண்மையில் வழங்கியது.
நுண்கலை படிப்புகளை தொடங்குவதற்கான அனுமதிக் கடிதத்தை “ப்ரிட்ஜ்’ அகாதெமியின் இயக்குநர் ரகுராமன் அவர்களிடம் தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வீணை காயத்ரி வழங்கினார். இதன் மூலம் “ப்ரிட்ஜ்’ அகாதெமியில் பரத நாட்டியம், வாய்ப்பாட்டு, வயலின், வீணை போன்ற பட்டப் படிப்புகளும் (பி.ஏ), பி.எஃப்.ஏ. (நுண்கலை) பட்டப் படிப்பும் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளது. தலைசிறந்த கலைஞர்களை உருவாக்கும் வகையில் இந்த நுண்கலைப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று “ப்ரிட்ஜ்’ அகாதெமி இயக்குநர் ரகுராமன் கூறினார்.
English Summary : Fine Arts course permitted in ‘Bridge’ Academy.