தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டாலே ஊட்டி, ஏற்காடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் மலர் கண்காட்சிகள், கோடை விழாக்கள் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, சென்னையில் செம்மொழி பூங்காவில் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி முதல் 5-ம் தேதி வரை மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

பெங்களூரு, உதகை மற்றும் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு கண்காட்சி நடத்தப்படுகிறது.

மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு ரூபாய் 20 கட்டணமாகவும், பெரியவர்களுக்கு ரூபாய் 50 நுழைவு கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *