பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு இன்று (மே 31) முதல் இணையதளம் மூலம் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று (31.05.2023) முதல் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மறுகூட்டலுக்கான கட்டணமாக உயிரியல் பாடத்துக்கு ரூ.305; இதர பாடங்களுக்கு ரூ.205 கட்ட வேண்டும். மறுமதிப்பீடுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் இந்த கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்ககம் இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *