சென்னையில் முன்மாதிரி சாலை திட்டப்படி ஹாரிங்டன் சாலை இரண்டு வழி சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதன்படி சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையின் கட்டுமான பணி, தேனாம்பேட்டை பகுதியின் கீழ் ரூ.9.63 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஹாரிங்டன் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
750 மீட்டர் தூரத்தில், 5.7 மீட்டர் அகலம் வரை பணி நிறைவடைந்துள்ளது. நடைபாதை, LED விளக்குகள் நிர்ணயம், சமநிலை பணி அடுத்த 3 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.