மத்திய அமைச்சரவை அரசியல் விவகாரங்களுக்கான கூட்டுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் பிப். 23-ம் தேதி முதல் மார்ச் 20-ம் தேதிவரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது எனவும், பிப். 26-ல் ரயில்வே பட்ஜெட்டும், பிப். 28-ல் பொது பட்ஜெட்டையும், தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார். மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.