கஜா புயலால் நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. குறிப்பாக நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் முற்றிலும் முடங்கியது.

கஜா புயலுக்கு இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சை, திண்டுக்கல், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 493 நிவாரண முகாம்களில் 2,49,083 பேர் உள்ளனர். கஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தில் 1.12 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. வேதாரண்யத்தில் மட்டும் 4 லட்சம் தென்னை மரங்கள் உட்பட 27.50 லட்சம் மரங்கள் சாய்ந்துள்ளன என தமிழக அரசு முதல்கட்டமாக தெரிவித்தது.

மேலும், 347 டிரான்ஸ்பர்மர்கள், 39,938 மின் கம்பங்கள், 3559 கி.மீ நீள மின் வடங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணாமாக 56,942 குடிசை வீடுகளுக்கும், 30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஆனால், நிவாரண பொருட்கள் வழங்குவதில் தமிழக அரசு மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக டெல்டா மக்கள் குற்றசாட்டுகின்றனர்.

சீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாத காரணத்தாலும், வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு டெல்டா பகுதியில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தாலும், நாளை நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *