38 ஆயிரத்து 186 கோடி மதிப்புள்ள மருந்துகளை சீனாவிடமிருந்து இந்திய கடந்த 4 ஆண்டுகளில் இறக்குமதி செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்மாசூட்டிக்கல் துறையின் இணை செயலாளர் கூறுகையில், கடந்த 2011-12-ம் ஆண்டில் சுமார் 8 ஆயிரத்து 798 கோடி ரூபாய், 2012-13-ல் 11 ஆயிரம் கோடி ரூபாய், 2013-14-ல் 11 ஆயிரத்து 865 கோடி ரூபாய் எனவும், நடப்பு ஆண்டிற்கான கால கட்டத்தில் சுமார் 6 ஆயிரத்து 521 கோடி ரூபாய் அளவிற்கு மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யபட்டுலதாக தெரிவித்தார். மேலும் மருந்து விலைகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும்போது சீனா விலையை ஏற்றி விடுகிறது என்றும் தெரிவித்தார். இதுகுறித்து ஆலோசிக்க மருத்துவ ஆராய்ச்சி துறை செயலாளர் டாக்டர் வி.எம்.காடோச் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடோச் குழு தனது அறிக்கையில், அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரிக்க ஆலோசிக்க பட்டது. நடைபெற்ற கருத்தரங்கில் குறைந்த செலவில் அத்தியாவசிய மருந்து பொருட்கள் தயாரி்ப்பது குறித்த ஆய்வு முக்கியம் எனவும் வலியுறுத்தப்பட்டது.