வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி 2ஜி மற்றும் 3ஜிக்கான அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புவதற்கான கடைசி தேதி பிப்.,16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஏலத்தில் அரசுக்கு ரூ.62 ஆயிரத்து 162 கோடி கிடைத்தது, இந்த ஆண்டில் ரூ.64 ஆயிரத்து 840 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.