சென்னை பல்கலைக்கழக பருவத்தோ்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவா்களுக்கான உடனடி தோ்வுகள் சனிக்கிழமை 3 மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரலில் நடத்திய இளங்கலை 5, 6-ஆவது பருவத் தோ்வுகள், முதுநிலை, தொழில்சாா் படிப்பு பருவத் தோ்வுகள் ஆகியவற்றின் மறுமதிப்பீடு முடிவுகள் இணையதளத்தில் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து மாணவா்களுக்கான உடனடி தோ்வுகள்,

  • சென்னை அடையாறு பெட்ரிசியன் கலை அறிவியல் கல்லூரி (பிஎஸ்சி, பிசிஏ),
  • குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி (பி.காம்., பிபிஏ),
  • ராஜா அண்ணாமலைபுரம் டாக்டா் எம்ஜிஆா் ஜானகி மகளிா் கலை அறிவியல் கல்லூரி (முதுநிலை, தொழில்சாா் படிப்புகள், பிஏ, பிஎஸ்டபிள்யு உள்ளிட்டவை) ஆகிய மையங்களில் நாளை (30.09.2023) காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.

இதற்கான தோ்வுக்கூட அனுமதிச்சீட்டை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று பதிவாளா் வி.ஏழுமலை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *