மழைக்காலத்தில் தான் பெரும்பாலானோர் நோய்வாய்ப்படுவார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால் கிருமிகள் அதிகம் பரவுவதால், குறிப்பாக குழந்தைகளுக்கு , மழைக்காலம் தன்னோடு பல ஆரோக்கிய கேடுகளையும் சேர்த்தே கொண்டு வருகிறது.

ஆயுர்வேதம் கூறுவது என்னவென்றால், மழைக்காலத்தின் போது வாத தோஷம் உச்சத்திலிருக்கும். மழைக்காலத்தின் போது வறுக்கப்பட்ட , பொறிக்கப்பட்ட உணவுகளை நிறைய சாப்பிடுமாறு தூண்டும். இவற்றில் எண்ணெய் அதிகமாக இருக்கும். இருப்பினும், நமது செரிமான மண்டலம் பலவித நோய்தாக்குதலுக்கு எளிதில் இலக்காகும் ஒன்றாகும். இந்த எண்ணெய் அதிகமுள்ள உணவுகள் முழுவதும் செரிக்காமல் பலவித சுகாதாரக்கேடுகளை கொண்டு வரும்.

இப்போது, இந்த காரணங்களுக்காக மழையை வெறுப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் “மழையைவிட சூரியன் தான் உயிரின் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது, மேலும் நோய் பரப்பும் நுண்ணுயிரிகளையும் வளர்ப்பதும் அதுவே”. மேலும் மழையை விரும்புபவர்கள் ஆனால் அதனை அனுபவிக்கத் தயங்குபவர்கள் இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிந்து கொள்ளுங்கள், சரியான முறையில் நம்மை பாதுகாத்துக் கொள்ளும்போது, மழைக்காலம் நமக்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் மட்டுமே கொண்டுவரும். இல்லாவிடில் அது நோயையும், இன்னல்களையும் மட்டுமே தரும். இவை சில பயனுள்ள ஆயுர்வேத புத்தகங்களில் தரப்பட்டுள்ள குறிப்புகள். இதை நம்மிடையே பகிர்ந்து கொள்வது லீவர் ஆயுர்வேத நிபுணர் டாக்டர். மஹேஷ் டி.எஸ்

டாக்டர். மஹேஷ் அலிகரிலுள்ள, ஜீவன் ஜோதி ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் த்ரவ்யகுண துறையின் தலைவரும், பேராசிரியரும் ஆவார். அவர் கூறுகிறார், முதல் மழைத்துளி மண்னில் படும்போது எழும் மணமானது நோயை குணப்படுத்தும் தன்மையையும்,நோய்த்தடுப்பு ஆற்றலையும் தரவல்லது. அதனை நுகரவும், அனுபவிக்கவும் ஒவ்வொருவரும் முயன்றிட வேண்டும்.

ஆகவே, ஆயுர்வேத புத்தகங்களிலிருந்து நேரடியாக மழைக்காலத்தில் செய்ய வேண்டியது, வேண்டாதது சிலவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதனை கடைபிடிப்பதனால் , மழைக்காலத்தில் நுண்ணுயிரிகளின் அதிகபட்ச தாக்குதலில் இருந்து உங்கள் உடலினை பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் இந்த குறிப்புகள் மெதுவாக வேலை செய்யும் செரிமான மண்டலத்தின் பிரச்னைகளிலிருந்தும் காத்துக்கொள்ள உதவும்.

ஆயுர்வேதம் சொல்லும் “மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை”

*மழைக்காலத்தில் , எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ணுங்கள். பாதுகாக்கப்பட்ட காய்ந்த தானிய வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள் அதாவது மக்காச்சோளம், கொண்டைக்கடலை, கடலை மாவு மற்றும் ஓட்ஸ் ஆகியவை. புதிதாக அறுவடை செய்யப்பட தானியங்களை தவிர்த்து விடுங்கள் . நெய்யும் இஞ்சியும் சேர்க்கப்பட்ட பாசிப்பருப்பினால் செய்யப்பட கஞ்சி மழைக்காலத்தில் அருந்திட மிகவும் ஏற்றது.

*கொதிக்கவைக்கப்பட்ட தண்ணீரையே பருகுங்கள். அதுதான் கிருமிகள் நீக்கத்தை உறுதிசெய்கிறது. கொதிக்க வைத்த தண்ணீரை 24 மணி நேரத்திற்குள் பருகுங்கள்.

*பச்சைக்காய்கறிகளை சமைப்பதற்கு முன் நன்கு கழுவ வேண்டும் . மேலும் அதனை நீங்கள் பச்சையாக உண்ண விரும்பினால் கழுவும்போது இன்னும் கவனமாக இருங்கள்.

*உங்களின் செரிமான அடிப்படையிலேயே உண்ண வேண்டும் என ஆயுர்வேதம் கூறுகிறது. உங்களின் ஜதராக்னியின் செயல்பாடு குறித்து தெரிந்து கொள்வது நல்லது. .அதாவது, உங்களின் செரிமான நெருப்பு அல்லது பசியினை அது குறிக்கும்.

*மழைக்காலத்தின் போது இஞ்சி, பெருங்காயம், பூண்டு, சீரகம், தனியா , மஞ்சள் மற்றும் மிளகு ஆகிய மசாலா பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும் என ஆயுர்வேதம் சொல்கிறது. இவை உடலின் செரிமான சக்தியை மேம்படுத்த வல்லவையாகும். மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அவை அதிகரிக்கச்செய்யும்.

*மழைக்காலத்தின் போது சாப்பிடவேண்டிய காய்கறிகள் புடலங்காய், கொத்தவரங்காய், பாகற்காய், கோவைக்காய் மற்றும் பிஞ்சு பூசணிக்காய் ஆகியவை ஆகும், அந்தந்த பருவநிலைகளில் கிடைக்கும் பழங்களையே சாப்பிடுங்கள்.

*மழைக்காலத்தில் உபவாசம் இருத்தல் மிகவும் நல்லது, குறிப்பாக அடிக்கடி சாப்பிடுபவர்கள் . ஒரு வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை உபவாசம் இருப்பது உங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும். மேலும் உங்களுடைய செரிமான மணடலத்தை மேம்படுத்தும்.

ஆயுர்வேதம் சொல்லும் “மழைக்காலத்தில் செய்யக்கூடாதவை”

*இட்லி, ஊத்தப்பம் அல்லது தோசை போன்ற புளிக்கவைக்கப்பட்ட மாவினால் செய்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டாம்

*பச்சை காய்கறிகள், முளை கட்டிய பயறு வகைகள், புளித்த அல்லது குளிர்பதனப்பெட்டியில் பாதுகாக்கப்பட்ட உணவுகள், புளி, ஊறுகாய்கள் மற்றும் சட்னிகள் ஆகியவற்றை தவிர்க்கவும்.

*சோளம் மற்றும் கேழ்வரகு உபயோகத்தினை குறைத்துக்கொள்ளுங்கள். அதிக அளவு தண்ணீர் உள்ள உணவுப்பொருட்களான சாதம், தர்பூசணி மற்றும் முலாம்பழம் ஆகியவற்றை தவிர்க்கவும். இவை உடலில் வீக்கத்தினை ஏற்படுத்தும்.

*உடலின் செரிமான மண்டலத்தினை பலவீனப்படுத்தும் உணவுகளை தவிர்த்திடுங்கள். இதில் தயிர், அதிக உப்புள்ள உணவு வகைகள் மற்றும் சாலட் போன்ற பச்சை காய்கறி உணவுகள் ஆகியவை அடங்கும்

*மழைக்காலத்தின்போது அசைவ உணவு வகைகள் குறைந்த அளவில் உண்ணப்படவேண்டும்

*பகல் நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

*அதிக உழைப்பு வேண்டாம், உங்களை அது அதிக அளவில் சோர்வடையச் செய்துவிடும்.

*இரவில் தாமதமாக உண்ண வேண்டாம்

*மிதமான அளவிலேயே உடற்பயிற்சி செய்யப்படவேண்டும், சிறு நடைப்பயிற்சி மற்றும் எளிமையான யோகாசனங்கள் போதுமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *