இளையதளபதி விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் விஜய் 59′ படத்தை இயக்கவிருக்கும் ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லி, அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் மும்முரமாக உள்ளார்.

இந்நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் ‘விஜய் 60’ படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. சுப்பிரமணியபுரம், நாடோடி, சுந்தரபாண்டியன் போன்ற பல படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்த நடிகரும், இயக்குனருமான சசிகுமார், ‘விஜய் 60’ படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

‘விஜய் 60’ படத்தின் கதை மதுரையை மையமாக கொண்டது என்றும், ஆக்சன் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஒரு பொழுதுபோக்கு படமாக இது அமையும் என்றும் சசிகுமார் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சசிகுமார் தற்போது பாலா இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமியுடன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘விஜய் 60’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Join ilayathalapathy with sasikumar?