உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நண்பேண்டா’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி ரிலீஸாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது மேலும் ஒரு ரீமேக் படத்தை தயாரித்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1985ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் சூப்பர் ஹிட் ஆகிய ‘ஆண் பாவம்’ படத்தை உதயநிதி ஸ்டாலின் ரீமேக் செய்து அதில் நாயகனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் பாண்டியராஜன் மற்றும் பாண்டியன் நடித்த வேடங்களில் உதயநிதியும் சந்தானமும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சீதா, ரேவதி நடித்த வேடங்களில் நடிக்க பிரபல நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

உதயநிதி தற்போது ‘மான் கராத்தே’ இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் ‘கெத்து’ என்ற திரைப்படத்திலும், ‘என்றென்றும் காதல்’ பட இயக்குனர் அஹ்மது இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : ‘ Anpavam ‘ Udhayanidhi – santhanam in the remake ?