மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி ஆகிய விடுமுறை தினங்கள் தொடர்ச்சியாக வந்துள்ளதால் பொதுமக்களின் வசதிக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் செயல்பட்டு வரும் ஆதார் மையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று ஆதார் பதிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தற்போது மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எழிலகம், ராஜாஜி பவன் உள்பட 65 இடங்களில் ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை தினங்களாக இருந்து வருகின்றன. இந்நிலையில் மகாவீரர் ஜெயந்தி, புனிதவெள்ளி ஆகிய விடுமுறை தினங்களைத் தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் நாளை ஞாயிறு அன்று சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து ஆதார் மையங்களும் செயல்படும் என்றும் இதன் மூலம் சென்னை மாநகருக்கு உட்பட்ட மண்டல அலுலகங்கள், தாலுகா அலுலகங்களில் செயல்பட்டு வரும் ஆதார் பதிவு மையங்களில் நாளை பொதுமக்கள் ஆதார் அட்டைக்கு பதிவு செய்யலாம் என்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு இணை இயக்குநர் கிருஷ்ணாராவ் கூறியுள்ளார்.

மேலும் சென்னை அவர்கள் விடுத்த ஒரு அறிக்கையில், ‘அண்ணாநகர், திரு.வி.க. நகர் ஆகிய பகுதி பொதுமக்கள் பயனடையும் வகையில் ஐ.சி.எஃப். தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆதார் சிறப்பு மையம், கடந்த இரண்டு வாரங்களாக செயல்பட்டு வருவதாகவும், இந்த சிறப்பு மையம் வரும் இரண்டு வாரங்கள் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் செயல்படும் என்றும் இந்த மையத்தில் தேசிய மக்கள் தொகை பதிவகத்தில் (என்.பி.ஆர்.) பதிவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த மையத்தில் விண்ணப்பித்த ஒரே வாரத்தில் தேசிய மக்கள் தொகை பதிவகத்தில் விண்ணப்பதாரரின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

English Summary : Adhar usual operation center in Chennai tomorrow