ராஜலக்ஷ்மி குழுமத்தின் அங்கமான, ராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரி (தண்டலம்) – ல் கல்லூரி தின விழா நேற்று (02.04.2015) கொண்டாடப்பட்டது.

டாக்டர் திருமதி. தங்கம் மேகநாதன், தலைவர், ராஜலக்ஷ்மி குழுமம், வருகை தந்த அனைவரையும் வரவேற்று விழாவை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், திரு. மணிகண்டன் ராகவன், துணை தலைவர், ஏர்டெல் மற்றும் திரு. என். முரளிதரன், பொது மேலாளர், நிறுவன மனித வளத்துறை, அசோக் லெய்லான்ட், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

2014 – 2015 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்லூரி அறிக்கையை, கல்லூரி தலைமையாசிரியர் திரு. ஜி. தனிகையரசு வெளியிட்டார்.

தென்னிந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரி தற்போது பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் கணினி பயன்பாடு ஆகிய துறைகளில் 10 இளநிலை பட்டப்படிப்பு மற்றும் 10 முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. வருடத்திற்கு சராசரியாக 1770 மாணவர் சேர்க்கப்படுகின்றனர். தற்போது 5465 மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். மேலும் இக்கலூரியின் ஒன்பது துறைகள் ஆராய்ச்சி மையங்களாக அண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கிகரிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக அளவில் 75 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். எம். வெண்ணிலா, எம்.இ., மருத்துவ மின்னணு மற்றும் எஸ். சித்திரா, எம். இ., எம்பெட்டெட் சிஸ்டம்ஸ் ஆகியோர் பல்கலைக்கழக தங்க பதக்கம் வென்றுள்ளனர்.

திரு. மணிகண்டன் ராகவன் பேசுகையில் பகுத்தறிவு மற்றும் தர்க்கரீதியில் மாணவர்கள் யோசிக்க வேண்டும், இவ்வகையான மாணவர்களை ராஜலக்ஷ்மி குழுமம் உருவக்குவதாலேயே அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் எனக் கூறினார்.

திரு. முரளிதரன், கூட்டு முயற்சி மற்றும் தெள்ளிய புரிந்துகொள்ளும் ஆற்றல் இவற்றின் மேன்மையைப் பற்றி பேசினார். இக்கட்டான நேரங்களிலும் யார் தளராது பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களுக்கே ஒளிமயமான வாழ்க்கையுண்டு எனக் கூறிய அவர் ராஜலக்ஷ்மி குழுமம் இன்று பெருநிறுவனங்கள் தேடிச்சென்று மாணவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் அளவுக்கு சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாண்டில் தேசிய அளவில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினர்.

இவ்வாண்டு டி.ஸி.எஸ்., எல் & டி, விப்ரோ, சதர்லாண்ட், அசோக் லெய்லான்ட், ஜே கே டயர்ஸ் மற்றும் ஜான்சன் கண்ட்ரோல் ஆகிய நிறுவனங்களில் 721 மாணவர்கள் இதுவரை வளாக நேர்முகத்தேர்வில் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

English Summary : Rajalakshmi Engineering College College day was celebrated yesterday(2-4-2015). Airtel Vice President Mr.Manikandan Raghavan, Ashok Leyland General Manager Mr.N.Muralitharan appeared as Chief Guests.