அஜீத்துடன் நடிக்கும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் அவருடைய நடிப்பை புகழ்கின்றார்களோ இல்லையோ கண்டிப்பாக அவருடைய பர்சனல் குணநலன்கள் குறித்து பேசாமல் இதுவரை யாரும் இருந்ததில்லை. அஜீத்துடன் முதன்முதலாக ‘என்னை அறிந்தால்’ படத்தில் இணைந்த அருண்விஜய் அந்த படத்தின் படப்பிடிப்பின்போதும், படம் வெளியான பின்பும், அஜீத்தின் மென்மையான குணங்கள் குறித்து வானளாவ புகழ்ந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் ‘தல 56′ படத்தில் வில்லனாக நடித்து வரும் கபீர்சிங் தற்போது அஜீத் புகழ்பாட ஆரம்பித்துள்ளார். அவர் தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் அஜீத் குறித்து கூறியதாவது, ” அஜீத்தை நான் முதன்முதலாக பார்த்ததும் நான் புரிந்து கொண்டது அவர் ஒரு பர்பெக்ட் ஜெண்டில்மேன் மற்றும் மனித நேயம் மிக்கவர் என்பதைத்தான். அவர் ஒரு காணக்கிடைக்காத வைரம். சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ. அவருடைய டிசிப்ளின், பிறருக்கு உதவும் தன்மை என்பது இயற்கையாகவே அமைந்தது. அவர் ஒரு சூப்பர் ஸ்டாராகவும், கோலிவுட் கடவுளாகவும் மதிக்கப்பட்டு இருந்தாலும், அவருடைய பார்வையில் அனைவரும் சமமே’ என்று புகழ்ந்துள்ளார்.

அஜீத்துக்கு எதிரியாக நடித்திருந்தாலும் அருண்விஜய்யை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய அவருடைய ரசிகர்கள் கண்டிப்பாக கபீர்சிங்கிற்கும் அதே மரியாதையை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், மற்றும் பலர் நடித்து ‘தல 56’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையில் சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Thala 56 Villan Kabir singh praised Ajith after experiencing his Acting style and Character in real life.