தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்கனவே ஆயுட்கால உறுப்பினராக இருந்தாலும் கடந்த ஆண்டு வெளியான புதிய வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் இல்லாததால் சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் அவர் வாக்களிக்க முடியவில்லை. இந்நிலையில் மீண்டும் வாக்களிக்கும் உரிமை கொண்ட ஆயுள்கால உறுப்பினராக கருணாநிதியை சேர்க்க தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி ஒரு அரசியல்வாதியாக மட்டுமின்றி திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, நாடக நடிகர், பாடலாசிரியர் என பல முகங்களைக் கொண்டவர். கடந்த 1989ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஆயுள்கால உறுப்பினராக இருந்து வந்த அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலும் இதற்கு முன்னர் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தலின்போது, திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை. இதனால், வாக்களிக்கும் உரிமையை இழந்த கருணாநிதி, தொழில்முறை அல்லாத ஆயுள்கால உறுப்பினராக மாற்றப்பட்டார். இதனால் கடந்தத் தேர்தலில் அவர் வாக்களிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அப்போது, கருணாநிதியை வாக்களிக்கும் உரிமை கொண்ட ஆயுள்கால உறுப்பினராகச் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary: Kalaingar Karunanidhi will be life time member in South Indian Actors Association.