voters listசென்னையில் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் அளித்த புகார்களை தொடர்ந்து தேர்தல் ஆணையம் போலியான வாக்காளர்களை நீக்கும் பணியில் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் நீக்கப்பட்ட போலி வாக்காளர்களின் விபரங்கள் சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் அந்த இணையதளத்தில் இதுகுறித்த விபரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்துபோன வாக்காளர்கள், பலமுறை பதிவு செய்யப்பட்ட, மறுபடியும் இடம்பெற்ற வாக்காளர்கள் ஆகியோரின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி செம்மைப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 29-ம் தேதி வரை நடைபெறும் இப்பணி தொடர்பான சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பி.சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மண்டல அலுவலர்களுக்கு கீழ் பணிபுரியும் அனைத்து அலுவலர்களையும் இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் தங்கள் கள ஆய்வை முடிக்க உள்ளனர். பின்னர் நீக்கப்பட உள்ள வாக்காளர்களின் பெயர் பட்டியல் 20-ம் தேதி வெளி யிடப்படும். இறுதி நீக்கல் பட்டியல் மாநகராட்சி இணையதளமான www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில்ல் வெளியிடப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary: How to identify the deleted fake Voters list in Chennai.