சமீபத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது 10ஆம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கான செய்முறைதேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: 10ஆம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே பிப்ரவரி 22 முதல் மார்ச் 2 வரை நடைபெற உள்ளன.

இதுகுறித்த அறிவிப்பு கிடைக்கப்பெறாத தனித் தேர்வர்கள், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட கல்வி அலுவலரை நேரில் தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

English Summary: Practical Exam Dates announced for 10th Exam Private Candidates.